Thursday, April 19, 2007

கண்ணை மறைக்கும் காவிக் குடுமி - இந்துவும், இந்து தேசியமும்!

இந்துவும், இந்து தேசியமும்:

நம்மை நோக்கி எப்பொழுதுமே வெகு சுலபமானதொரு கேள்வி ஒன்றை கேட்பார்கள் பார்ப்ப்னியத்தின் ஆதரவாளர்கள். அதாவது, 'ஏன் எப்பொழுதும் இந்துத்துவத்தை மட்டும் விமர்சிக்கிறீர்கள் இதே போன்று மற்ற மதங்களை விமர்சிப்பதில்லையே'.

இதற்க்கு நாம் பொதுவாக, இந்துத்துவம் எனப்படும் பார்ப்ப்னியம் ஒரு மதமல்ல, அது ஒரு அடக்குமுறைத் தத்துவம், மேலும் பார்ப்ப்னியமே இந்தியாவின் அனைத்து அடிப்படைவாத வெறிகளுக்கும் மூல தத்துவம், மேலும் ஏகாதிபத்திய சுரண்டலுக்கு ஏதுவான சமூக சூழலை உருவாக்குவதும் பார்ப்ப்னியமே எனவே அதனை எதிர்ப்பதுதான் எமது முதல் கடமை. மற்றபடி பிற மத அடிப்படைவாதங்களை தேவையான போது மதம் என்ற அடிப்படையில் விமர்சித்தே வந்துள்ளோம். என்பதாக நமது பதில் இருக்கும்.

ஆனால் இந்த இடத்தில் பார்ப்ப்னியத்தின ஆதரவாளர்கள் ஒரு பித்தலாட்ட வேலை செய்கிறார்கள். நாம் இந்துத்துவம் என்று எதிர்ப்பது பார்ப்ப்னியத்தை மட்டுமே, ஆனால் இவர்கள் நம்மை பார்த்து கேள்விக் கேட்க்கும் போது இஸ்லாம், கிறுத்துவர் தவிர்த்து அனைத்து வழிபாட்டு முறைகளையும் இந்துத்துவத்திற்க்குள் அடக்கி கேள்வி கேட்பார்கள்.

ஆக, விசயம் இதுதான். 'இந்துத்துவத்தை தான் நீ எதிர்ப்பாயா? வேறு எதையும் எதிர்க்க மாட்டாயா?' என்று நம்மிடம் கேள்விக் கேட்க்கப்பட்டால், நாம் பதிலுக்கு அவர்களிடம் கேட்க்க வேண்டிய கேள்வி:
'இந்துத்துவம் என்று நீ எதை சொல்கிறாய்?'
'நான் எதிர்ப்பதைத்தான் இந்துத்துவம் என்று சொல்கிறாய் எனில் அது பார்ப்னியம் மட்டுமே'.

நாம் பார்ப்ப்னியத்தை திட்டுவதையே எல்லா இந்திய வழிபாட்டு முறைகளையும் திட்டுவதாகவும், நாம் பார்ப்ப்னிய தேசியத்தை திட்டினால் ஒட்டு மொத்த இந்திய தேசியத்திற்க்கே விரோதமாக திட்டுவதாகவும் கண்டனம் செய்வதன் மூலம் இவர்கள் இரண்டு உண்மைகளை இவர்கள் வாயாலேயே ஒத்துக் கொள்கிறார்கள்.

#1) இந்துத்துவம் எனப்படுவது பார்ப்ப்னிய வர்ணாஸ்ரம தர்மமே. அதாவது அது ஒரு மதமல்ல. சமூக ஒடுக்குமுறை தத்துவம் என்ற உண்மையை ஒத்துக் கொள்கிறார்கள்.

#2) இந்து அல்லது பார்ப்னிய தேசியம் என்பதுதான் இந்திய தேசியம் என்ற உண்மையையும் ஒத்துக் கொள்கிறார்கள்.

நாட்டார் வழிபாட்டு முறைகளை அழிக்கும் பார்ப்பனியம் குறித்து நாம் கேள்விகள் கேட்ட பொழுது இவர்கள் பதில் சொல்லாமல் நழுவிப் போனதில் இந்த உண்மை இன்னும் எடுப்பாக தெரிந்தது.

பார்ப்ப்னியம் குறித்தும், தேசியம் குறித்தும் இந்த புரிதல்தான் இவர்களை ஏகாதிபத்தியத்தின் அடிவருடிகளாக கூச்ச நாச்சமின்றி வேலை செய்யச் செய்கிறது. எப்படியெனில் பெரும்பான்மை மக்களின் வாழ்வை நாசமாக்கும் வகையில் ஏகாதிபத்தியங்கள் இந்திய இறையாண்மையை குப்பைத் தொட்டியில் வீசினால் இவர்களுக்கு வலிக்காது. ஏனேனில் அவ்வாறு செய்யும் போது இவர்களின் பார்ப்ப்னிய தேசியத்தின் இறையாண்மைக்கு எந்த குந்தகமும் ஏற்ப்படுவதில்லை. அத்துடன் தரகு பணமும் கிடைக்கிறது(ஏகாதிபத்திய நிறுவனங்கள் இங்கே சுரண்டுவதற்க்கு மாமா வேலை பார்த்து கிடைக்கும் தரகு பணம்).

இதே அடிப்படையில்தான் இவர்களின் தலைவன் 'பெரும் பொய்யன்' கோல்வால்கர் பிரிட்டிஸ் காலனியாதிக்கத்திற்க்கு அடிமை சேவகம் செய்தான். எப்படியெனில், "பிரிட்டிஸ் அரசு மட்டுமல்ல யார் வேண்டுமானாலும் பதி விரதை பாரத மாதவை கூட்டிக் கொடுக்கலாம். ஆனால் இந்து (ie: பார்ப்ப்னியத்தின்) பெருமைக்கு மட்டும் குந்தகம் வந்து விடக் கூடாது. எமது கருத்தில் பிரிட்டிஷ் அரசு இந்து தர்மத்திற்க்கு (அதாவது பார்ப்ப்னிய தர்மத்திற்க்கு) குந்தகம் விளைவிக்கும் அரசாக இல்லாதவரை அவர்கள் வெளியேற வேண்டிய அவசியமில்லை"(#1, #2) என்றான்.

அப்போ பாரத மாதா? அட போடா அபிஸ்டு, கூட்டிக் கொடுத்தா காசு வருமுன்னாக்க அத்த செய்றதுல என்ன துன்பம் வந்தச்சு? ஒரு யாகம் செஞ்சாக்க எல்லாம் சரியாப் போயிடாது?
பாரதா மாதகி ஜொய்ங்............

இப்படிப்பட்ட அரசில் இந்துவுக்கு என்ன இடமிருக்கும்?
ஆக, பெரும்பான்மை இந்துக்கள் என இவர்கள் குறிப்பிடும் மக்களின் வாழ்க்கையுடன் எவன் எப்படி விளையாண்டாலும் பரவாயில்லை. பழைய காலத்து நம்பியார் படம் போல பாரத மாதாவை துரத்தி துரத்தி வன்புணர்ச்சி செய்தாலும் இவர்களுக்கு கவலையில்லை. இவர்களுக்கு நோக்கம் ராமேஸ்வரம் கோயிலில் உள்ள 'பார்ப்பனர்கள் மட்டுமே உள்ளே நுழைய அனுமதி' என்ற பலகை மீது ஏகாதிபத்தியமோ அல்லது வெறு வெளிநாட்டு சக்திகளோ(வேற யாரு? கம்யுனிஸ்டுகள், ஜனநாயக சக்திகளைத்தான் வெளிநாட்டு சக்திகள் என்று இவர்கள் சொல்கிறார்கள்) கை வைத்து இந்து தர்மத்திற்க்கு அழிவை உண்டாக்கிவிடாமல் இருந்தால் போதும். இதற்க்காக பல தலைமுறைகள் வெளிநாட்டிலேயே வாழ்ந்த பார்ப்ப்னிய தேசத்து மைந்தர்கள் சதி செய்வதெல்லாம் உள்நாட்டு புனித போராக பார்க்கப்படும்.

நீங்களே பாருங்கள், ஆடம் பிரிட்ஜ் என்று இயற்கையாக உருவான ஒரு பாலம் சிரிலங்காவையும் இந்தியாவையும் இணைக்கிறது. இதனை உடைத்து சேது சமுத்திரம் கட்டுவதில் ஏகாதிபத்தியத்தின் திட்டம் ஒன்று உள்ளது. அது இந்திய கடல் வளத்தை கொள்ளையடிப்பது மற்றும் யுத்த கேந்திர ரீதியாக இந்திய கடல் பரப்பில் இலகுவாக அமெரிக்க மேலாதிக்கத்தை உறுதிப்படுத்துவது என்ற அமெரிக்காவின் ராணுவ பொருளாதார நலன்களுக்கான ஒரு திட்டமே. ஆக, இவர்களின் சந்தைப் போட்டிக்காக இந்திய மக்களின் வாழ்வை நிர்மூலமாக்காதே என்ற அடிப்படையில் நாம் அந்த திட்டத்தை எதிர்க்கிறோம்.

இதே திட்டத்தை இதே அமெரிக்க மேலாதிக்கம் என்ற ஆச்சர்யகரமான முழக்கத்துடன் இன்னொரு கும்பலும் எதிர்க்கிறது. என்னாடாதி அதிசயம் 'கண்ணை மறைக்கும் காவிக் குடுமி'யையும் மீறி அமெரிக்க மேலாதிக்கம் இவர்கள் கண்ணுக்கு தெரிந்ததோ என்று ஆச்சர்யப்படும் வேலையில்தான் இன்னோரு முழக்கம் காதில் விழுகிறது - 'ராமன் பாலத்தை உடைக்காதே! அங்குதான் ராமன் குந்த வைத்து மேம்படி வேலைகளைச் செய்தான்!' என்று.

இதோ இங்கு மீண்டும் பார்ப்ப்னிய தேசத்தின் இறையாண்மை என்பது ராமன் மேப்படி வேலைகள் செய்த இடத்தின் புனிதம் காக்கும் அளவில்தான் உள்ளது என்பதையும், மக்களின் அடிப்படை பிரச்சனைகள் குறித்து இந்த கற்பனாவாதி கபோதிகளுக்கு கிஞ்சித்தும் அக்கறை கிடையாது என்பதையும் நிரூபித்துவிட்டார்கள். உண்மையில் இவர்களின் பார்ப்ப்னிய தேசியத்தில் பெரும்பான்மை உழைக்கும் மக்களின் நலன்களுக்கு எந்த இடமும் இல்லை என்பதையும் எடுப்பாக காட்டுகிறார்கள்.

இப்படிப்பட்ட அரசில் இந்துவுக்கு என்ன இடம் இருக்கும்? இவர்கள் வாயிலிருந்தே நமக்கு தெளிவாக புலப்படும் விசயம் இந்து என்று இவர்கள் சொல்வது பார்ப்ப்னியர்களையே(பிறப்பின் அடிப்படையில் அல்ல மாறாக பார்ப்ப்னிய பண்பாட்டை சுவீகரித்த எவரும் பார்ப்ப்னியரே). அப்படியெனில் பெரும்பான்மை உழைக்கும் மக்கள் இந்துக்கள் கிடையாது என்பதுதான் இவர்களே மறைமுகமாக ஒத்துக் கொள்ளும் உண்மை. ஏனேனில் பார்ப்ப்னியம் என்று இவர்கள் சொல்லும் விசயங்களை ஒருவன் படித்து தத்துவரீதியாக அதனை சுவீகரிக்க வேண்டும் எனில் அவன் குறைந்தது நடுத்தர வர்க்க பின்னணி கொண்டவராக இருக்க வேண்டும். எனவே உழைக்கும் மக்கள் இந்து என்ற பொதுவாக நிலவும் கருத்தின் அடிப்படையில் இவர்களுக்கு அடியாள் வேலை செய்ய திரள்வார்களே அன்றி, இவர்களின் ராஜ்ஜியத்தில் அவர்களின் நலனுக்கென்று ஒன்றும் கிடையாது. ஆக, இந்துக்கள் அல்லாதவருக்கு இந்து தேசத்தில் என்ன இடம் என்று கோல்வால்கன் சொல்கிறானோ அதே இடம் தான் சர்டிபிகேட் படி இந்து எனப்படுபடும் உழைக்கும் மக்களுக்கும் தரப்படும்.

நாட்டார் வழிபாட்டு தெய்வங்களை நயவஞ்சகமாக அழிப்பதற்க்கும், பிற மதத்தவர் வழிபாட்டு தளங்களை அப்பட்டமாக அழிப்பதற்க்கும் உள்ள வித்தியாசம் போன்ற ஒரு வித்தியாசம் வேண்டுமானால் உழைக்கும் மக்கள் இந்துவுக்கும், பிற மதத்தவருக்கும் இருக்கலாம். அழிவு என்னவோ நிச்சயம். பார்ப்ப்னியத்தில் கறைந்தது போக சில சொற்ப அடையாளம் மட்டும் மிஞ்சலாம். ஆனால் ஒரு விசயம், சர்டிபிகேட்டி இந்து என்று போட்டுக் கொள்ளும் உரிமை விட்டு வைக்கப்படும். ஏனேனில் அடியாள் வேலை செய்ய ஒரு ஐடெண்டிட்டி தேவைப்படுகிறதல்லவா?

இவர்களின் நடவடிக்கைகளும் பார்ப்ப்னியத்தின் நலன் காக்கும் அம்சத்தில் மட்டுமே உள்ளது. தவிர்க்க இயலாமல் ஏகாதிபத்தியத்தின் நாகரிக நடவடிக்கைகள் பார்ப்ப்னியத்தின் பழைய பஞ்சாங்க (ஆடம் பிரிட்ஜை இடிப்பது போன்று) நடவடிக்கைகளுடன் முரன்படும் இடத்தில் மட்டும்தான் இவர்கள் இருவரும் வேறு வேறு வர்க்கங்கள் என்ற விசயம் வெளி வருகிறது. இடஓதுக்கீடு விசயத்தில் கூட சும்மா ஒரு கொள்கை தீர்மானத்தை மட்டும் நிறைவேற்றி விட்டு உண்மையில் இவர்களின் அணிகளை எல்லாம் இடஓதுக்கீடு எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொள்ளச் செய்தனர். ஏன் இடஓதுக்கீடை ஆதரிக்கும் இவர்கள் அதனை எதிர்த்தவர்களின் மண்டயை உடைத்து வீட்டுக்கு அனுப்பும் ஒரேயொரு போராட்டம், ஒரேயொரு துண்டறிக்கை வெளியிட்டார்களா? ஷில்பா செட்டியின் ஜட்டி வெளியே தெரிந்தால் கூட ஊரே அலற ஒப்பாரி வைக்கும் இந்த மடவெறி கூட்டம் இடஓதுக்கீட்டிற்கு ஆதரவாக வெறும் தீர்மானம் மட்டும் இயற்றினார்கள் எனில் இவர்களின் மொசடி என்னவென்பதை புரிந்து கொள்ளலாம்.


சாதியை இவர்கள் ஏற்றுக் கொள்வதில்லையே?
ஆம் இவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. ஏனேனில் சாதி என்ற மேல் ஓடு தனது உண்மையான அர்த்தத்தை இழந்து விட்டது. "பாருங்களேன் கொடுமையை, டோண்டு என்ற ஒரு பார்ப்பன சாதியைச் சேர்ந்தவர் பிராமணனுக்குரிய எந்த பண்பும் இன்றி வெறும் அடையாளத்தை மட்டும் தூக்கிக் கொண்டு வலம் வருவதை, பாருங்களேன் பாசமிகு தம்பி நீலகண்டன் ஒரு பிராமணனுக்குரிய எல்லா அம்சங்களுடன் வலம் வருவதை" - இப்படி மறைமுகமாக நமக்கு சொல்கிறார்கள் நீலகண்டன் போன்ற RSS வெறியர்கள்.

ஏன் இது ஏற்பட்டது? எவ்வளவுதான் சாதி ரீதியாக பிறப்பின் அடிப்படையில் பொருளாதார நலன்களை பரம்பரை பரம்பரையாக அனுபவித்து வந்தாலும், சமூகத்தின் வளர்ச்சிப் போக்கில் சாதி வேறுபாடுகளை மீறி தாழ்த்தப்பட்ட, பிற்ப்படுத்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த பெரும் எண்ணிக்கையிலானவர்கள் செல்வாக்கு படைத்தவர்களாக மாறி நிற்பது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பார்ப்ப்னியம் அவ்வப் பொழுது சந்தித்து வரும் ஒரு பிரச்சனைதான். அதுவும் குறிப்பாக பிரிட்டிஸ்க்காரகள் இந்தியாவின் ஆசிய பொருளாதார அமைப்பை சிதைத்தன் மூலம் இந்த போக்கை வீரியமாக்கினார்கள். பட்டா போட்டு நிலத்தை தனியுடமை ஆக்கினார்கள். நிலவுடைமை என்பதை சாதி கடந்த ஒரு விசயமாக வெள்ளையர்கள் மாற்றினார்கள்.

ஆக, இன்று சாதி என்பது எந்த வகையிலும் வர்ண அமைப்பின் விதிமுறைகளை ஏற்றுக் கொள்வதாய் இல்லை. சாதியை ஏற்றுக் கொள்வது எனில் சில அபிஷ்டு சர்டிபிகேட் பார்ப்பனரை பிராமனராக பார்க்க வேண்டும். அந்த முட்டாள்தனத்தை செய்வது நீலகண்டன் போன்ற சுத்தமான RSS பார்ப்பனர்களுக்கு ஏற்புடையதல்ல. ஆள் சேர்த்து ஆங்கீகாரம் பெறுவதற்க்கும் பிற சாதி அறிவுஜீவிகளை ஜீரணிக்க வேண்டியுள்ளது.

இந்த வர்க்க வர்ண முரன்பாட்டை எப்படி சமாளிப்பது? பார்ப்பனியத்தின் உண்மையான இன்றைய வரலாற்று கடமை என்னவாக இருக்க முடியும்? ஏற்கனவே சொன்னது போல பார்ப்ப்னியத்திற்க்கு இது ஒரு புதிய சிக்கலல்ல. வரலாற்றில் இது போல சிக்கல்களை சந்தித்த போதெல்லாம் அது தன்னை சிறிது ஜனநாயகப்படுத்திக் கொண்டு தப்பித்துவிடும்.

வர்க்க பிரிவுக்கும் வர்ண பிரிவுக்குமான முரன்பாடிற்க்கு வரலாறு நெடுகிலும் பல உதாரணங்கள் உள்ளன. குறிப்பாக சத்ரியர், பார்ப்ப்னர் சண்டையும் அதன் விளைவாக தத்துவங்களில் ஏற்பட்ட வளர்ச்சிப் போக்கின் வரலாறாகத்தான் வேத காலம் (மீமாம்சம், வேதாந்தம், சாருவாகம் etc) தொட்டு பகவத் கீதை காலம் வரையிலான வரலாறு உள்ளதாக பல வரலாற்று அறிஞர்கள் கருதுகிறார்கள். விஸ்வாமித்திரர் எனும் சத்ரிய முனியன், பரசுராமன் எனும் பார்ப்ப்ன வெறியன் - இப்படி இன்னும் பல உதாரணங்கள். இந்த அம்சத்தில் விலாவாரியாக பேசுவது இந்த கட்டுரையில் சாத்தியமில்லை. இதை ஒரு hypothesisஆக எடுத்துக் கொண்டு தொடர்ந்து படிக்கவும்.

ஆக, சாதி என்பதை இவர்கள் இந்த அம்சத்தில்தான் ஏற்றுக் கொள்வதில்லை. அதாவது இனிமேலும் வர்ண அமைப்பின் புனிதம் காக்கும் வரையறைக்குள் சாதி என்ற வடிவம் இல்லை என்ற அர்த்தத்திலேயே.

அப்படியேனில், வர்ண அமைப்பு சரிதானா? என்று கேள்வி எழுகிறது. வர்ணம் என்பது குணத்தின் அடிப்படையில் உருவாகிறது என்கிறார்கள் இவர்கள். குணம் என்று இவர்கள் சொல்லும் மூன்று குறிப்பான குணங்கள் யாவும் பிறக்கும் போதே எற்படுவதல்ல என்பதை உயிரியலின் இது வரையான கண்டுபிடிப்புகளின் அடிப்படையிலேயே சொல்லலாம். அப்படியானால் வேறு எப்படி ஏற்ப்படுகிறது? உண்மையில் ஒருவனது குணம் அவன் பிறந்து வளரும் சூழலாலேயே பிரதானமாக தீர்மானிக்கப்படுகிறது. அப்படியெனில் இவர்கள் சொல்லும் இந்த குணங்கள் என்பவை இயல்பாகவே ஒருவனுடைய பொருளாதார பிரிவினடிப்படையிலான குணங்களே ஆகும். ஒரு ஏழை வீட்டில் பிறந்தவன், சேரியில் வளருபவன் எந்த காலத்திலும் பிராமனனுக்குரியதாக இவர்கள் சொல்லும் குணங்களுடன் வளரும் வாய்ப்புகளை மிக மிக குறைவாவே பெறுகிறான். அப்படியெனில் அவன் வர்ண படிக்கட்டில் கீழ் நிலைக்கு செல்கிறான். அவனது குழந்தையும் அதே நிலையில் தொடர்கிறது. ஆக மீண்டும் அது பிறப்பனடிப்படையிலான சாதி அமைப்பில்தான் போய் முடியும். ஒரு வேளை அதற்க்கு அப்பொழுது வேறு ஏதாவது பெயர் வைத்து அழைப்பார்கள். ஆனால் விசயம் இதுதான் - "ஒரு வர்க்க சமுதாயத்தில் , வர்ண சமுதாயம் சாதி சமுதாயமாகவே சீரழியும். தனியுடைமை அழிந்த ஒரு நவீன எதிர்கால வர்க்கமற்ற சமுதாயத்தில் வர்ண சமுதாயம் என்பது தேவையின்றி அழிந்து போகும்".

இதுதான் இவர்கள் சொல்லும் இந்து தேசியத்தின் லட்சணம், இதுதான் இவர்கள் சொல்லும் இந்து தர்மம். இதுதான் வரணாஸ்ரமத்தின் தன்மை. இவ்வளவுதான் இந்து உழைக்கும் மக்களுக்கு இவர்கள் தரும் இடம். இதனை புரிந்து கொண்டு இந்த மக்கள் விரோத தத்துவத்தை வேரோடு அழிக்க ஜனநாயக சக்திகள் அனைத்தும் புரட்சிகர சக்திகளுடன் அணி திரண்டு போராட வேண்டும். அதுதான் இந்திய தேசியத்தை இந்து தேசம் எனும் பார்ப்பன கொடுங்கோன்மையிலிருந்தும், மறுகாலனியம் எனும் ஏகாதிபத்திய கொடுங்கோன்மையிலிருந்தும் விடுதலை செய்யும் போராக இருக்கும்.

அதற்க்கு முதல் தேவையாக இந்து என்று இவர்கள் பிரதிநிதித்துவப் படுத்துவதாக சொல்லும் மக்களின் நலனும் உண்மையில் இவர்களின் சித்தாந்த பொருளாதார சார்பின் கீழ் பிரதிநிதித்துவப் படுத்தும் பார்ப்ப்னியர்களின் நலனும் வெவ்வேறு என்ற புரிதல் வேண்டும்.(அதாவது இந்து என்ற பொதுப் புரிதல் வேறு அவர்களின் அர்த்தத்தில் அது பார்ப்பனியர்களையே குறிக்கிறது).

இரண்டாவது தேவையாக இந்தியாவில் சாதி ரீதியாகவோ அல்லது மத ரீதியாகவோ அணி திரண்டு, அடையாளப்படுத்திக் கொண்டு இவர்களை எதிர்த்து எந்த பலனையும் அடைந்து விட முடியாது என்பது. உண்மையில் இப்படி அணி திரள்வது என்பது அவர்களின் சித்தாந்தத்தை ஏற்றுக் கொண்டே அவர்களை எதிர்ப்பது என்பதாகும்.

மூன்றாவது தேவையாக, பார்ப்ப்னிய பயங்கரவாதத்திற்க்கு என்று ஒரு வர்க்க இயல்பு உள்ளது என்பதையும், அந்த அம்சத்தில் அதனது பொருளாதார சுரண்டல் அடிப்படையை எதிர்க்காமல் அவர்களை தத்துவ தளத்தில் மட்டும் வெற்றி கொள்ள முடியாது என்பதாகும்.

இந்த புரிதல் வரும் பொழுது புரட்சிகர-ஜனநாயக சக்திகள் மட்டுமே இந்த மூன்று அம்சங்களையும் உள்ளடக்கி பார்ப்பினியத்திற்க்கு சாவு மணியடிக்கும் சித்தாந்த-அமைப்பு பலம் பெற்றவையாக இருப்பது புரிய வரும்.

01 Irul Nerunguthu... (If you have problem accessing click here)


அசுரன்



பாடல்: காவி இருள், மகஇக வெளியீடு


பாடல் ஒலிப் பேழைகள் வேண்டுவோர் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
இரா. சீனிவாசன், No 18, முல்லை நகர் வணிக வளாகம், இரண்டாவது நிழற்சாலை, அசோக் நகர், சென்னை - 83


தொலைபேசி: 23718706