Thursday, April 19, 2007

பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்தவர்கள்!

மார்க்ஸின் காலனிய பார்வை குறித்த பொய்:

நீலகண்டன் மார்க்ஸின் காலனிய பார்வை என்று எதைச் சொல்கிறார்? "இந்தியாவின் துன்பங்கள் பார்ப்பனர்களால வெகு காலத்துக்கு முன்பே கிருத்து பிறப்பதற்கு வெகு காலத்துக்கு முன்பே தொடங்கிவிட்டது என்று மார்க்ஸ் சொல்வதைத்தான் இவர் மார்க்ஸினுடைய காலனிய பார்வை என்கிறார். நீலகண்டனின் வர்க்க பாசம் வேலை செய்கிறது. இதே கருத்தை முன் வைத்த சாருவாகர்கள், பௌத்தர்களை எந்த காலனிய பார்வை ஆட் கொண்டது என்ற கேள்விகளுக்கெல்லாம் இவரிடமிருந்து பதில் வராது.

மார்க்ஸ் இந்தியாவின் வளங்களையும், படையெடுப்பு வரலாறையும், புவியியல் கூறுகளையும் இத்தாலியுடன் ஒப்பிடுகிறார். இந்தியாவின் துன்பங்களை அயர்லாந்துடன் ஒப்பிடுகிறார்.

இந்தியாவில் பிரிட்டிஸ் அரசாட்சி ஏற்படுத்தியிருந்த மிகக் கொடூரமான விளைவுகளை மிகச் சரியாக சொல்கிறார் மார்க்ஸ். இன்றும் அதன் விளைவுகளை வெகு எடுப்பாக நாம் பார்க்கிறோம். இதே வார்த்தைகளை இந்தியாவின் விடுதலையில் விருப்பம் கொண்டவர்களும் கூறுகிறார்கள். முரன் நகையாக இதே வார்த்தைகளை இந்துத்துவக்காரர்களும் கூட சொல்கிறார்கள். எனவே இந்துத்துவக்காரர்கள் எல்லாம் காலனிய பார்வையுடையவர்கள் என்று நீலகண்டன் சொல்வார் என்று எதிர்ப்பார்த்தால் தவறிழைக்கிறீர்கள்.
"பேச நா இரண்டுடையா போற்றி!".

இது தவிர்த்து செமி பார்பேரியன், செமி சிவிலைஸ்டு என்று இந்திய சமூகத்தை மார்க்ஸ் குறிப்பிடும் இடத்தில் அதன் காரணம் என்னவென்று ஒப்பிட்டு பார்க்க வேண்டும்(context). அதை விடுத்து அகண்ட பாரத கனவு காணும் கற்பனாவாதிகளின் பண்டைய பெருமைகள் பற்றிய ஊதிப் பெருக்க வைக்கப்பட்ட பொய்களின் அடிப்படையில் இந்த வார்த்தைகளை நோக்கினால் மார்க்ஸை காலனிய பார்வை கொண்டவர் என்பது போல அரைகுறை வியாக்கியானம் செய்யும் முட்டாள்தனத்தில் வந்து முடியும். மார்க்ஸ் இருந்ததோ ஐரோப்பிய நாகரிகம் தழைத்தோங்கிய ஒரு சூழல், தொழில் புரட்சி, பெரும் தொழில்சாலைகள், பாரளுமன்றம், பகுதி அளவில் ஆட்சி செய்த நிலபிரபுக்களின் ஆதிக்கம் முற்றிலும் ஒழிந்து போய் மையப்படுத்தப்பட்ட, முழு கட்டுப்பாட்டை நாடெங்கும் செலுத்தும் அரசு வடிவம். அதே நேரத்தில் இந்தியாவின் நிலை என்ன? குழந்தை திருமணம், சதி, சாதி, தீண்டாமை, பல்வேறு மூடநம்பிக்கைகளின் உறைவிடமாய், கிராம நிர்வாகம் எனும் சிதறிய உற்பத்தி முறையில், பாளையக்காரர்கள் போன்ற பகுதி அளவிலானவர்களின் செல்வாக்கு மண்டலங்களாக சிதறிய சமூகம், நிலபிரபுத்துவத்துக்கேயுரிய பிற்போக்குத்தனங்களுடன் இருந்தது. மார்க்ஸினுடைய கண்டனம் அனைத்தும் ஐரோப்பாவிற்க்கு பல்லாயிரம் வருடம் முன்பே நாகரிகம் தழைத்தோங்கி இருந்து பிறகு அழுகிய நிலையில் நெடிய காலத்திற்க்கு நிலவி, அந்த இடைப்பட்ட நேரத்தில் ஐரோப்பா முந்திக் கொண்டு சென்றதை முன்னிட்டே. இதன் அர்த்தம் முதலாளித்துவ ஐரோப்பா பிற்போக்கானது இல்லை என்ற அர்த்தத்தில் அல்ல. மாறாக நிலபிரபுத்துவ பிற்போக்குதனங்கள் எந்த வகையில் பார்த்தாலும் முதலாளித்துவ பிற்போக்குதனத்தைவிட கேவலமானது என்ற அர்த்ததிலேயே வருகின்றன. ஏனேனில் ஐரோப்பாவையும் மிகக் கடுமையாக விமர்சிக்கிறார் மார்க்ஸ்.

இவையநநத்துமே பிரிட்டிஸ்க்காரர்கள் இந்திய சமூக பொருளாதார அமைப்பில் திரும்ப சரி செய்ய முடியாத அளவு ஏற்படுத்திய பாதிப்புகள், ஆசிய சொத்துடமை வடிவத்தின் சாதக பாதக அம்சங்கள் போன்றவை குறித்து கூறிய பிற்பாடே சொல்கிறார் மார்க்ஸ். ஆயினும் மார்க்ஸியத்தை ஏகாதிபத்தியவாதிகளின் நூல்களின் மூலம் மட்டுமே அதுவும் மேற்கோள்கள் மற்றும் அரைப் பொய்களின் மூலம் மட்டுமே அறிய துணிந்த நீலகண்டன் சுலபமாக ஒரு வரியில் மார்க்ஸின் பார்வை காலனிய பார்வை என்று சொல்வது அவரது மேம்போக்கான வாசிப்பு முறையையே காட்டுகிறது. சொந்த கருத்தோட்டங்களிலேயே சுயமுரன்பாட்டுக்கு இட்டுச் செல்லும் முடிவுகளுக்கு வருவதற்க்காக பார்ப்ப்னியம் என்றுமே வெட்க்கப் படுவதில்லை. அதனை நீங்கள் அம்பலப்படுத்தி எவ்வளவு கேவலப்படுத்தினாலும் மீண்டும் அதே சுயமுரன்பாட்டு முட்டாள் கருத்துக்களை சொல்வார்கள். ஏனேனில் கோயபல்ஸின் வழிமுறைகளில் நம்பிக்கைக் கொண்டவர்கள் இவர்கள்.
"பொய்களே என்றும் பகர்வர் போற்றி!"

கடுமையான உழைப்பை செலுத்தும், மோன நிலையிலிருக்கும்(எந்த ஒரு புரட்சியோ, போராட்டமோ, கிளர்ச்சியோ இன்றி) இருக்கும் எண்ணிலடங்கா இந்திய கிராம அமைப்புகள் பிரிட்டிசாரால் சிரழிக்கப்பட்டு. சிதறடிக்கப்பட்டு துன்ப பெருங்கடலில் வீசப்படுவதை நாம் கண்ணுற வேண்டியுள்ளதாக மார்க்ஸ் குறிப்பிடுகிறார். இந்திய காட்டன் குறித்தும், இந்தியாவின் கைவினை பொருட்களின் தரம் குறித்தும் அவற்றை அழிக்கும் பிரிட்டிஸார் குறித்தும் குறிப்பிடுகிறார் மார்க்ஸ். இந்தியா பிரிட்டிஸாரின் ஆட்சியில் தனது புரதான காலாச்சாரத்தை இழந்து வருவதை குறிப்பிடுகிறார். மேலும் புதிய முயற்சிகள் இல்லாத மாற்றம் என்பதே இல்லையோ என்பது போல மிக மிக மிக மெதுவான சமூக மாற்றத்தை/சமூக வீழ்ச்சியை உள்ளடக்கிய, இயல்பாக வளர வேண்டிய சமூகத்தை சாதி, அடிமை முறை என்று மடைதிருப்பி மாற்றமேயில்லாத இயற்கை தலைவிதியின் பாற்ப்பட்ட சமூக வளர்ச்சியைக் கொண்டு அதன் விளைவாகவே மிகவும் புரதானமான பண்டைய இயற்கை வழிபாட்டு முறையை வழக்கத்தில் கொண்டு - மனிதன் எனும் இயற்கையின் சுதந்திர படைப்பை அனுமன் எனும் குரங்கின் கால்களிலும், பசு எனும் மாட்டின் கால்களிலும் விழ வைக்கும் அழுகி வரும் ஆசிய சொத்துடமை வடிவமாகிய கிரா சுய தேவை பூர்த்தி செய்யும் பொருளாதார அமைப்பை கடிந்து சொல்கிறார். இவையனைத்துமே ஐரோப்பாவின் தொழிற்புரட்சி அங்கு ஏற்படுத்திய மாற்றங்களுக்கு மாறாக அழகானதாக தோற்றம் தரும் ஆசியாவின் கிராம சொத்துடைமை வடிவம் இங்கு மாற்றங்களை மிக மிக மெதுவாக ஏற்படுத்துவது கண்டு ஏற்பட்ட ஆற்றாமையின் வெளிப்பாடுகளேயாகும்.

இந்தியாவின் மோன நிலையை கடுமையாக கண்டன குரலெழுப்பி கண்டிக்கும் மார்க்ஸ் அதே நேரத்தில் இந்தியாவை மோன நிலையிலிருந்து தட்டியெழுப்பும் சமூக புரட்சியை முதல் முறையாக செய்யும் ஐரோப்பா அதை செயல்படுத்தும் விதம் குறித்தும் தமது கடும் கண்டனக் குரலை எழுப்புகிறார். துரதிருஷ்டவசமாக அல்ல மாறாக வேண்டுமென்றே நீலகண்டன் படித்த புத்தகங்களில் இந்திய சமூகம் குறித்து மார்க்ஸ் எழுப்பும் கண்டனக் குரல்கள் மட்டும் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். அதனை கண்ணுற்ற நீலகண்டன் தனது குடுமி அவிழ ஆவேசம் கொண்டு மார்க்ஸின் பார்வை காலனிய கருத்தோட்டம் என்று முடிவுக்கு வருகிறார். "வாழ்க அவர் அரைகுறை ஆய்வு முயற்சிகள்". பிரிட்டன் குறித்த மார்க்ஸீன் கண்டனப் பார்வையையும் கணக்கில் கொண்டால் ஒட்டு மொத்தமாக சுரண்டலுக்கெதிரான மார்க்ஸின் தார்மீக கோபத்தையே அது காட்டுகிறது. சுரண்டல்க்காரர்கள் மார்க்ஸை நிந்தனை செய்வதில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும்?

உண்மையில் இவற்றை காலனியப் பார்வை என்று கூறுவதில் இந்துத்துவத்தின் வெளியே சொல்லமுடியாத பெருங்கனவு குறித்த ஏக்கப் பெருமூச்சுதான் வெளிப்படுகிறது. ஏன் வெளியே சொல்லமுடியாதது என்பதை பார்ப்ப்னிய பயங்கரவதிகள்தான் சொல்ல வேண்டும் ஏனெனில் நாம் பல முறை கேட்ட கேள்விகளுக்கு அவர்கள் பதில் சொல்லவில்லையெனில் வெளியே சொல்லமுடியாத ஏதோ ஒன்றுதான் நமது கேள்விகளுக்கு பதிலாக இருக்கும் என்று நாம் அனுமானிக்க வேண்டிய நிர்பந்தத்திற்க்கு தள்ளப்படுகிறோம். ஒரு வேளை உழைக்கும் வர்க்கத்தின் பிரதிநிதிகளாகிய நாங்கள் சூத்திரர்கள் ஆகையால் அவற்றை எம்மிடம் பகர்வது இந்து தரமத்திற்க்கு விரோதமானதோ?
"காதிலே காய்ச்சிய ஈயமே போற்றி!"



கலை கலைக்காக - கூத்தாடும் நீலகண்டனின் அவதூறு:

அடிமுட்டாள் ஒருவன் நீலகண்டனின் பதிவில் கூறினான், "மார்க்ஸியனாக ஒரு விஞ்ஞானி இருந்தால் அவன் முட்டாளாகத்தான் இருக்க முடியும்" என்று. மார்க்ஸியத்துக்கு ஆதரவாக வந்தார் இந்த உலகின் ஆகத் தலை சிறந்த விஞ்ஞானியான ஐன்ஸ்டீன். இந்த அடிமுட்டாள், ஐன்ஸ்டீனையும்
கூட அடி முட்டாள் என்று சொல்லும் அபாயம் உள்ளது. அது அவர்கள் உட்கொண்ட இந்துத்துவ பயங்கரவாத போதைப் பொருளின் விளைவு.

இந்த அல்பைகள் தாங்கள் மூழ்கி குளிக்கின்ற சாக்கடை குட்டையையே இந்த உலகம் என்று கருதி அந்த குட்டையின் விளிம்பிலிருந்தே தமது உலக கண்ணோட்டத்தை வளர்த்துக் கொள்கிறார்கள். என்ன செய்ய இந்த அல்பவாதிகளின் பார்வையில் ஐன்ஸ்டீனும் அடி முட்டாள்தான். இந்த அல்பவாதம் வெறும் தனிமனித குணாம்ச சம்பந்தப்பட்ட விசயமல்ல. இது ஒரு அரசியல் பண்பாடு. இதன் அரசியல் ஆளும் வர்க்க சேவகம் செய்வது. எனவேதான் இந்த அல்பவாதம் கலை முதலான அனைத்து விதமான அரசு வடிவங்களிலும் தனது இருப்பைக் காட்டுகிறது.

கலை கலைக்குத்தான் என்று சாமியாடும் கும்பல் அவ்வாறு சொல்வதில் ஆதாயம் இல்லாமல் சொல்லவில்லை. மக்களின் பிரச்சனைகளை பேச விடாமல் கலைஞர்களை ஊழல் மயப்படுத்தி போதையூட்டி தனது கருத்துக்களை பேச வைக்க தார்மீக பலம் கொடுப்பதோடல்லாமல், கலைக்கு புனித வட்டம் கட்டி அதனை உழைக்கும் மக்களிடமிருந்து தள்ளி வைக்கும் மனு நிதிக்கும் ஆதரவாக இருப்பதாலேயே 'கலை கலைக்குத்தான்' என்ற இந்த கருத்தாக்கத்தை ஆதரிக்கிறார்கள் இவர்கள்.

கலை இலக்கியமல்லவா? வெறும் தார்மீக பலம் பலன் கொடுக்குமா? அழகியல் வேண்டாமா? இதோ அடிமுட்டாள்கள் தங்களது குட்டையில் மிதக்கும் குப்பைகளையும், துகள்களையும் நுன்னோக்கி கொண்டு 200 பக்கங்களுக்கு விவரிப்பு செய்து எழுதும் அழகை பாருங்கள். இதை ஆழ்மன ஆய்வு, உள்மன அனுபவம் என்றும் சொல்வார்கள்.

இதே போன்று அல்பைத்தனமாக ஆராய்ச்சி செய்தவர்கள் இந்தியாவுக்கு புதிதல்ல, வரலாற்றில் ஒரு அல்பை இருட்டில் தொங்குவது கயிறா அல்லது பாம்பா என்று ஆராய்ச்சி செய்தது. அந்த அல்பையின் பெயர் ஆதி சங்கரன், அந்த அல்பவாத தோற்ற விளைவு மாயாவாதம். இன்றைக்கு உலகமயச் சூழலில் அல்பவாதிகளுக்கா பஞ்சம்? இப்படித்தான் ஒரு அல்பவாதி தான் புழங்கும் ஒரு குட்டையை அகழ்வாராய்ச்சி செய்து அனைத்து குப்பைகளையும் ஆகப் பெரிதான நுன்னோக்கி கொண்டு பார்த்த பிற்பாடு கூறியது, "இந்த உலகில் எல்லா விசயங்களுமே ஆய்வு செய்து ஆழமாக செல்ல செல்ல அபத்தமாக இருக்கிறது". அந்த அல்பவாதியின் பெயர் ஜெயமோகன். குப்பைகளை நுன்னோக்கி கொண்டு அல்ல வெறும் கண்களில் பார்த்தாலே அபத்தம் என்று சொல்லிவிடலாம். ஆனால் அப்படி சுலபமாக செய்தால் கலை அரிப்பை சொரிந்து கொள்ள முடியாதே? இவர்களின் 'சுய சொறிதல்'அனுபவத்திற்க்கு கலை இலக்கிய நுன்னோக்கியும், 200 பக்கமும் தேவைப்படுகிறது.

அல்பவாதியின் உலகம் தனது சேற்றுக் குட்டையின் அடி ஆழத்தில் ஆரம்பித்து விளிம்பில் முடிந்து விடுகிறது. சிலருக்கு இது தலைகீழாகவும் நடக்கிறது. ஐன்ஸ்டீனை அடி முட்டாள் என்று அர்த்தம் வர வியாக்கியானம் செய்த அல்பையும், மார்க்ஸியத்தை ஏகாதிபத்திய அவதூறுகளின் துணை கொண்டு ஆய்வு செய்ய முயன்ற அல்பையும் கூட இதே ரகம்தான். இந்த அல்பைகள் கலை கலைக்காகத்தான் என்று கதறுவதில் உள்ள அடிப்படை இயங்கியல் இதுதான். ஒரு அல்பவாதியின் நாவலை தமது கடைகளில் விற்க்கும் விசயத்துக்கும் இதுவே அடிப்படை.

கலை கலைக்காகத்தான் என்று கலைஞர்களை ஏதோ சமூகத்திற்க்கு சம்பந்தமில்லாதவர்களாக மாற்றும் கருத்து முதல் வாத கோஸ்டிகளை பாரதிதாசனின் இந்த பாடலை கேட்ட பின்பு மதிப்பிடுங்கள். "எல்லாம் எமக்கு தெரியும், ஆழ்ந்து ஆராய்ச்சி செய்தால் எதிலும் ஒன்றும் இருப்பதில்லை. அபத்தமே மிஞ்சுகிறது", என்று சுயதிருப்தியில் சலிப்புடன் சொல்லும் கலைஞர்களையே எல்லாம் தெரிந்த வித்தகர்கள் என்றும், அறிவாளிகள் என்றும் சிலர் கருதி வரும் போது, கவிஞரும் எழுதுகிறார், எதைப் பற்றி? இதோ படியுங்கள்.

ஏடெடுத்தேன் கவி ஒன்று வரைந்திட
'என்னை எழு'தென்று சொன்னதுவான்!
ஓடையுந் தாமரைப் பூக்களும் தங்களின்
ஓவியந் தீட்டுக, என்றுரைக்கும்!
ஓவியந் தீட்டுக, என்றுரைக்கும்!

காடும் கழனியும் கார்முகிலும் வந்து
கண்ணைக் கவர்ந்திட எத்தனிக்கும்!
ஆடும் மயில்நிகர்ப் பெண்களெல்லாம் உயிர்
அன்பினைச் சித்திரம் செய்க,என்றார்!
அன்பினைச் சித்திரம் செய்க,என்றார்!

சோலைக் குளிர்தரு தென்றல்வரும், பசுந்
தோகை மயில்வரும் அன்னம்வரும்,
மாலைப் பொழுதினில் மேற்றிசையில் விழும்
மாணிக்கப் பரிதி காட்சிதரும்
மாணிக்கப் பரிதி காட்சிதரும்

'வேலைச் சுமந்திடும் வீரரின் தோள்உயர்
வெற்பென்று சொல்லி வரைக' எனும்
கோலங்கள் யாவும் மலைமலையாய் வந்து
கூவின என்னை! - இவற்றிடையே,
கூவின என்னை! - இவற்றிடையே,

இன்னலிலே, தமிழ் நாட்டினி லேயுள்ள
என்தமிழ் மக்கள் துயின்றிருந்தார்.
அன்னதோர் காட்சி -ரக்கமுண் டாக்கியென்
ஆவியில் வந்து கலந்ததுவே!
ஆவியில் வந்து கலந்ததுவே!

'இன்பத் தமிழ்க்கல்வி யாவரும் கற்றவர்
என்றுரைக்கும் நிலை எய்திவிட்டால்
துன்பங்கள் நீங்கும், சுகம்வரும், நெஞ்சினில்
தூய்மை யுண்டாகிடும், வீரம் வரும்.'



02 Eadeduthen.mp3 (If you have problem listening click here)



இதோ ரஸ்ய பாட்டாளி வர்க்க புரட்சியின் அதிர்வலை உலகெங்கும் எதிரொலித்தது போல இங்கு தமிழ்நாட்டிலும் பேரலைகளை உருவாக்கியது. கலை இலக்கியங்கள் யாவும் மக்களைப் பேசத் துவங்கின. பாரதிதாசன் என்ன விதிவிலக்க என்ன? 'கலை மக்களுக்காக' என்று உழைக்கும் வர்க்கத்தின் உரிமைக்காக பாடுகிறார். கேளுங்கள்.....

காடு களைந்தோம் - நல்ல
கழனி திருத்தியும் உழவு புரிந்தும்
நாடுகள் செய்தோம் - அங்கு
நாற்றிசை வீதிகள் தோற்றவும் செய்தோம்
வீடுகள் கண்டோ ம் - அங்கு
வேண்டிய பண்டங்கள் ஈண்டிடச் செய்தோம்
பாடுகள் பட்டோ ம் - புவி
பதமுறவே நாங்கள் நிதமும் உழைத்தோம்.
மலையைப் பிளந்தோம் - புவி
வாழவென் றேகடல் ஆழமும் தூர்த்தோம்
அலைகடல் மீதில் - பல்
லாயிரங் கப்பல்கள் போய்வரச் செய்தோம்
பலதொல் லையுற்றோம் - யாம்
பாதாளம் சென்று பசும்பொன் எடுத்தோம்
உலையில் இரும்பை - யாம்
உருக்கிப்பல் யந்திரம் பெருக்கியுந் தந்தோம்.

ஆடைகள் நெய்தோம் - பெரும்
ஆற்றை வளைத்துநெல் நாற்றுக்கள் நட்டோ ம்;
கூடை கலங்கள் - முதல்
கோபுரம் நற்சுதை வேலைகள் செய்தோம்
கோடையைக் காக்க - யாம்
குடையளித் தோம்நல்ல நடையன்கள் செய்தோம்
தேடிய பண்டம் - இந்தச்
செகத்தில் நிறைந்திட முகத்தெதிர் வைத்தோம்.
வாழ்வுக் கொவ்வாத - இந்த
வையத்தில் இந்நிலை எய்தப் புரிந்தோம்
ஆழ்கடல் காடு - மலை
அத்தனை யிற்பல சத்தை யெடுத்தோம்.
ஈழை அசுத்தம் - குப்பை
இலைஎன்ன வேஎங்கள் தலையிற் சுமந்தோம்.
சூழக் கிடந்தோம் - புவித்
தொழிலாள ராம்எங்கள் நிலைமையைக் கேளீர்.
கந்தை யணிந்தோம் - இரு
கையை விரித்தெங்கள் மெய்யினைப் போர்த்தோம்.
மொந்தையிற் கூழைப் - பலர்
மொய்த்துக் குடித்துப் பசித்துக் கிடந்தோம்
சந்தையில் மாடாய் - யாம்
சந்ததம் தங்கிட வீடுமில் லாமல்
சிந்தை மெலிந்தோம் - எங்கள்
சேவைக் கெலாம்இது செய்நன்றி தானோ?
மதத்தவன் தலைவீர்! - இந்த
மண்ணை வளைத்துள்ள அண்ணாத்தை மாரே!
குதர்க்கம் விளைத்தே - பெருங்
கொள்ளை யடித்திட்ட கோடி சுரர்காள்!
வதக்கிப் பிழிந்தே - சொத்தை
வடிகட்டி எம்மைத் துடிக்க விட்டீரே!
நிதியின் பெருக்கம் - விளை
நிலமுற்றும் உங்கள் வசம்பண்ணி விட்டீர்!
செப்புதல் கேட்பீர்! - இந்தச்
செகத்தொழி லாளர்கள் மிகப்பலர் ஆதலின்,
கப்பல் களாக - இனித்
தொழும்பர்க ளாக மதித்திட வேண்டாம்!
இப்பொழு தேநீர் - பொது
இன்பம் விளைந்திட உங்களின் சொத்தை
ஒப்ப டைப்பீரே - எங்கள்
உடலில் இரத்தம் கொதிப்பேறு முன்பே
ஒப்படைப்பீரே!

06 Kaadu Kalaintho...


தாம் குதித்து மூழ்கும் குட்டையையே இந்த பரந்த பிரபஞ்சமாக கருதி அந்த குட்டையின் ஆழத்தில் அபத்தமே உள்ளது என்று தனது குட்டையிலிருந்தே உலகை வியாக்கியானம் செய்யும் அல்பவாதிகளையும், அவர்களின் அல்லக்கைகளையும் கூட கவிஞர் தட்டியெழுப்புகிறார்.

கேளுங்கள் அல்பவாதிகளே!!
கெட்டி தட்டிய சுயதிருப்தியெனும் மேல் ஓடுகளை உடைத்து மண்டைச் சுரப்பை வெள்ளமென புரளச் செய்யுங்கள். பாருங்கள் இந்த பிருமாண்டமான மனித சமூகத்தின் யத்தனங்களை.... அவற்றில் இல்லாதா அழகியலா உங்களது ஆழ்மன குட்டையில் கிடைத்து விடும்.


அசுரன்


பாடல்கள்: பாரடா உனது மானிடப் பரப்பை - பாரதிதாசன் பாடல்கள், மகஇக வெளியீடு.

பாடல் ஒலிப் பேழைகள் வேண்டுவோர் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
இரா. சீனிவாசன், No 18, முல்லை நகர் வணிக வளாகம், இரண்டாவது நிழற்சாலை, அசோக் நகர், சென்னை - 83

தொலைபேசி: 23718706