நவீன கிழக்கிந்திய கம்பேனிகள் - SEZ!
பல்லாயிரம் வருடங்களாய் எந்த பிரதிபலனும் எதிர்பாராமல் சொந்தமாக நிலமின்றி அல்லது சொற்ப நிலத்தில் கடுமையான உழைப்பைச் செலுத்தி பரம்பரை பரம்பரையாக மக்களின் உணவுத் தேவைக்காக உழைக்கிறான் இந்திய விவசாயி. உழவன் கணக்குப் பார்த்தால் உளக்குக் கூட மிஞ்சாது என்பது பழமொழி மட்டுமல்ல அது நிதர்சனமான உண்மை என்பதுதான் இந்திய சமூகத்தின் கோடூரமான விசயம்.
இந்த நிலையில் அவனுக்கு பதிலுக்கு இந்த சமூகம் எதுவும் செய்யாவிடில் கூட பரவாயில்லை. ஆனால் இருக்கின்ற வாழ்வாதாரத்தையும் பிடுங்கி நாடோ டியாக, உள்நாட்டு அகதியாக வீசுவது என்பது துரோகத்திலேயே பெரிய துரோகம். SEZக்கள் என்பவை அப்படிப்பட்டவையே.
SEZக்களுக்கு நவீன கிழக்கிந்திய கம்பேனிகள் என்று இன்னுமொரு பரிமாணம் இருக்கிறது. அதனை பிறகு பார்ப்போம். அதற்க்கு முன்பாக அதற்க்கு ரியல் எஸ்டேட் பிசினஸ் என்று இன்னுமொரு முக்கிய பரிமாணம் இருப்பதையும், அது விவசாயிகளுக்கு துரோகம் இழைக்கும் செயல் என்பதையும், இந்திய சுயச்சார்பின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறை என்பதையும் பார்ப்போம்.
ரியல் எஸ்டேட் பிசினசும் - மாஃபியா அரசும்:
சிங்கூரில் டாடாவுக்கு என்று 'போலி கம்யுனிஸ்டு பாசிச CPM' அரசு மக்களை ஏமாற்றி வாங்கிய நிலத்திற்க்கு அவர்கள் கொடுத்த விலை 140 கோடி ரூபாய். இதற்க்கு டாடா கம்பேனி அரசுக்கு கொடுக்கும் விலை வெறும் 20 கோடி ரூபாய் இதையும் அரசே கடனாக கொடுக்கும். அதற்க்கான வட்டி என்பது மிக மிக மிக சொற்பமான அளவே ஆகும். கவனிக்கவும் சிங்கூர் நல்ல வளமான விவசாய நிலப்பகுதி என்பது குறிப்பிடத்தக்கது(ஏதோ - 220 percent crop density என்று சொல்கிறார்கள் எனக்கு ஒன்னும் புரியல, மொத்ததுல நல்ல விவசாய நிலம் என்று சொல்கிறார்கள் என்று மட்டும் புரிந்தது).
SEZக்களுக்கு ஒதுக்கப்படும் நிலங்கள் எல்லாம் குறைந்தது ஆயிரம், ஐயாயிரம் ஏக்கர் என்ற கணக்கில் ஒதுக்குகிறார்கள். அப்படியென்ன ஆயிரம் ஏக்கரில் பன்னாட்டு தரகு முதலாளிகள் மயிரப் புடுங்கி எறியப் போகிறார்கள் என்று பார்க்கும் முன்பு சில உண்மைகளைப் பார்த்து விடுவோம்.
பெங்களூர் எலெக்ட்ரானிக் சிட்டி எனும் தொழில்பேட்டை phase - I ன் அளவு முன்னூத்தி சொச்சம் ஏக்கர் மட்டுமே. அதில் 100க்கும் மேற்ப்பட்ட கம்பேனிகள் இருக்கின்றன. அவற்றில் பெரிய கம்பேனிகள் சிமன்ஸ், HP, இன்போசிஸ், விப்ரோ, சத்யம் உள்ளிட்டவை உள்ளன. இந்த கம்பேனிகளில் ஒவ்வொன்றும் பத்தாயிரம் எண்ணிக்கையில் ஆட்களை வேலைக்கு வைத்துள்ளனர். இது போக வங்கிகள், ஹோட்டல்கள், தங்குமிடங்கள் என்று பிற வசதிகளும் உள்ளிட்டே மூன்னூறு சொச்சம் ஏக்கர்தான். இவை அத்தனையும் நூறு கம்பேனிகளுக்கு மேல் ஒரே இடத்தில் இருக்கும் நிலையில். இந்தியாவில் இது போன்ற சிறப்பு தொழிற்பேட்டைகளில் மிகப் பெரியனவற்றுள் ஒன்று எலெக்ட்ரானிக் சிட்டி என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அடிவருடி அரசோ ஆயிரம், ரெண்டாயிரம், பல இடங்களில் 20,000 ஏக்கர் நிலங்களை அதிகபட்சம் ஒன்று அல்லது இரண்டு கம்பேனிகளுக்கு ஒதுக்குகிறது எனில் அதில் எந்த ஒரு நேர்மையான நோக்கத்தையும் பார்க்க முடியவில்லை. அவர்களின் உண்மையான நோக்கம் ரியல் எஸ்டேட் பிசினஸ்தான். ஏனேனில், SEZயில் 25% மட்டுமே உற்பத்தி கேந்திரங்களாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் மீதி இடங்களை கேளிக்கை விடுதிகள், தங்குமிடங்கள் உள்ளிட்ட விருப்பமான எவற்றை வேண்டுமானாலும் கட்டிக் கொள்ளலாம் என்றும் அரசு சலுகை கொடுத்துள்ளது. உண்மையில் 20,000 ஏக்கரை விடுங்கள், ஆயிரம் ஏக்கர் அளவுக்கே கூட தொழிற்சாலை கட்ட நிலம் தேவைப்படாது.
கல்கத்தா புறநகர் பகுதி ராஜர்ஹாட்டில் ஒரு ஹோட்டா(ஒரு நில அளவுக்கான அலகு) 5000 முதல் 15000 ரூபாய் வரை கொடுத்து நிலங்களை எடுத்துக் கொண்டது ஹிட்கோ என்ற அரசு நிறுவனம். இன்று அந்த நிலங்களின் மதிப்பு 10-20 லட்சம் வரை உள்ளது. அதாவது SEZயில் 25% இடத்தில் 'நாட்டுக்கு உதவாத' தொழிற்சாலையை கட்டி வைத்து, மீதியுள்ள இடத்தை ரியல் எஸ்டேட் வேலைகள் செய்து அதிக விலைக்கு விற்று கோடி கோடியாக அவன் கொள்ளையடிக்க அரசாங்கம் எடுபிடி வேலை பார்க்கிறது. இப்போது கொஞ்சம் முன்பு சொன்னவற்றை மீண்டும் மனதில் ஓட விடுங்கள் விலை மதிப்பில்லா சிங்கூர் நிலங்களை 140 கோடி ரூபாய்க்கு வாங்கி அதனை 20 கோடி ரூபாய்க்கு டாடாவுக்கு விற்க்கும் ஒருவனை புரோக்கர் நாய் என்று சொல்லாமல் வேறு எப்படி சொல்வது? அதற்க்காக மக்களை மிரட்டி, கடத்தி, சுட்டுக் கொல்பவனை ஃமாபியா என்று சொல்லாமல் வேறு எப்படி சொல்வது?
மும்பை, ஹைதராபாத், பெங்களூர் நகரங்களின் வளர்ச்சியின் உடன் விளைவாக ரியல் எஸ்டேட் பிசினஸும் வளர்ந்தது. அதனுடன் ரியல் எஸ்டேட் ஃமாபியாக்களும் வளர்ந்தனர். குறைந்த விலைக்கு சொத்துக்களை விற்க சொல்லி சொத்துக்களுக்கு சொந்தக்காரர்களை மிரட்டுவதுதான் இவர்களின் வேலை. ஆட்களை கடத்திச் சென்று கொல்வது உள்ளிட்ட எல்லா அக்கிரமங்களையும் இவர்கள் செய்வார்கள் இதோ நந்திகிராமத்திலும், சிங்கூரிலும் ரியல் எஸ்டேட் ஃமாபியாவாக அரசு நிற்கிறது. தமிழகத்தில் SEZ எனும் ரியல் எஸ்டேட் பிசினஸ்க்கு ஃமாபியா வேலை செய்பவராக தரகு தாத்தா கருணாநிதி நிற்கிறார் - "சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு எதிராக அனாவசியமாக பிரச்சனையை கிளப்புபவர்களை இந்த அரசு பொறுத்துக் கொண்டிருக்காது"(அவர் சொன்ன அதே வார்த்தைகள் நினைவில் இல்லை) இப்படி மிரட்டுகிறார் தாத்தா. எது அனாவசியம்? இந்தியாவின் வாழ்வை சூறையாட வரும் SEZ உனக்கு அத்தியாவசியம் எனில் உனது கணக்கில் எனது வாழ்க்கையே அனாவசியமாகிப் போகிறதே?
விவசாய நிலத்தை ஒதுக்குவது நியாயமா?
இந்தியா எனும் மிகப்பெரிய நிலப்பரப்பில் SEZக்களுக்கு ஒதுக்கப்பட்ட இடம் என்பது சொற்பம் என்று ஜல்லியடிக்கிறார் ஒருவர். இந்தியா உணவு தன்னிறைவு அடைந்த நாடு அல்ல. விவசாய உற்பத்தியை அதிகப்படுத்த வேண்டியுள்ளது. பூ இறால் பண்ணைகள் முதலானவற்றிற்க்கு முக்கியத்துவம் கொடுக்காமல், அத்தியாவசிய உணவு தாணியம் உள்ளிட்டவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து விவசாய நிலப்பரப்பை அதிகப்படுத்த வேண்டிய ஒரு நிலையில் தற்போதைய இந்தியா உள்ளது. இந்தியாவின் தற்போதைய விவசாய நிலப்பரப்பை இன்னும் விரிவு படுத்துவது, வளமான நிலங்களை நன்கு பயன்படுத்தும் அதே வேளையில், தரிசு நிலங்களை பண்படுத்தி விவசாய நிலங்களாக மாற்றுவது, விவசாயத்தை மையப்படுத்தப்பட்ட உற்பத்தி முறைக்குக் கொண்டு செல்வதன் மூலமாக சிறுக சிறுக விவசாய மக்கள் தொகையின் எண்ணிக்கையை குறைப்பது. இதனை ஈடுகட்டும் வகையில் பெரிய, சிறிய தொழிற்சாலைகள், பட்டறைகள் கட்டுவது இதுதான் உண்மையில் நாம் செல்ல வேண்டிய பாதை. இதுதான் உண்மையில் சமூகத்தின் ஒட்டு மொத்த அறிவு வளர்ச்சி, தொழில் நுட்ப வளர்ச்சிக்கு உதவுவதாக இருக்கும். ஆனால் இந்த விசயங்களை செய்யாமல் ஏமாற்றும் இந்த அரசு அதற்க்கு எதிர் திசையில் சென்று, இருக்கும் சொற்பமான வளமான நிலங்களையும் SEZக்கு கொடுப்பதை கொஞ்சமா ஏதோ கொடுத்துட்டு போறான் விட வேண்டியதுதானே என்று வெட்கமின்றி நியாயப்படுத்துகிறார்கள் மானங்கெட்டவர்கள். "உன் புள்ள குட்டிகளா ஒரே ஒரு நாள் வாடகைக்கு கொடேன், அதான் வருசம் முன்னூத்தி சொச்சம் நாள் நீ வைச்சிருக்க இல்லையா? ஒரேயொரு நாள் எனக்குக் கொடுத்தா குடியா முழுகிப் போயிரும்?" இதற்க்கு அந்த அடிவருடிகள் ஒத்துக் கொள்வார்கள் எனில் அதற்க்கப்புறம் இந்த SEZ விசயத்தைப் பேசிக்கலாம். ஆட்டோ க்காரனிடம் ஐந்து பைசாவுக்கு பேரம் பேசி கன்ஸ்யூமர் கோர்ட் போகும் நாதாரி நாய்கள், இவர்கள்தான் ஆயிரம் வருடங்கள் வியர்வை சிந்தி பண்படுத்திய விவசாய நிலத்தை SEZக்கு கொடுப்பதை சரி என்று சொல்கிறார்கள். யார் வீட்டு சொத்தை யார் விலை பேசுவது?
பிரச்சனைக்குரிய நந்திகிராம் பகுதி 100 கிராமங்களுக்கும் மேலானவற்றை உள்ளடக்கிய பகுதி என்பது குறிப்பிடத்தக்கது. பொது நலனுக்காக அல்ல மாறாக ஏதோ ஒரு தனியார் தரகு முதாலாளி கொள்ளை லாபம் அடிக்க லட்சக்கணக்கான மக்களை தியாகம் செய்யச் சொல்லி கேட்பதற்க்கு இவர்களெல்லாம் கொஞ்சம் கூட வெட்கப்படுவதில்லையே? சோற்றைத் தின்கிறார்களா அல்லது வேறு எதையுமா?
அதுவும் இந்த அயோக்கியத்தனம் அனைத்தும் 1894-ல் பிரிட்டிஸ்க்காரனால் போடப்பட்ட நிலம் கையகப்படுத்தும் ஒரு சட்டத்தின் பெயரிலேயே செய்யப்படுகிறது. இந்தியா விடுதலை பெறவில்லை என்பதற்க்கு இது ஒரு உதாரணம். உண்மையில் அரசின் கையில் ஏற்கனவே இருக்கின்ற நிலங்களையே தொழில் வளர்ச்சிக்கு உபயோகப்படுத்தலாம். அதனை விடுத்து இது போல கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை அவர்கள் ஆக்கிரமிப்பதில் பன்னாட்டு - தரகு கும்பல்களின் விருப்பத்துக்கு ஆடும் விசுவாசமே வெளிப்படுகிறது.
விவசாய நிலங்களை இவர்கள் கையகப்படுத்துவதில் நியாயமான விலை பெரும்பாலும் கொடுக்கப்படுவதில்லை. பொதுக்கருத்தை உருவாக்கி, மக்கள் மனதில் பயத்தை ஏற்ப்படுத்தி அவசர அவசரமாக கிடைத்த விலைக்கு கொடுக்க வைக்கும் உளவியல் தந்திரங்கள் முதல் பல்வேறு தந்திரங்களை செய்து எவ்வளவு தூரம் விலையை குறைத்து கொடுக்க முடியுமோ அவ்வளவு குறைத்தே கொடுக்கிறார்கள் ஃமாபியா அரசும், கம்பேனிகளும். சிங்கூரில் ஒரு ஏக்கருக்கு 8 லிருந்து 12 லட்சம் வரை கொடுத்துள்ளனர். மஹாராஸ்டிராவில் 4 லட்சம்தான். பலருக்கு ஒரு ஏக்கருக்கும் குறைவான நிலமே சொந்தமாக இருக்கிறது. நிரந்தரமான வாழ்க்கைக்கு உத்தரவாதம் தரும் நிலமா? நிரந்தரமில்லா பணத்திற்க்கு விற்று விட்டு வாழ்வை தொலைப்பதா? இந்த இரண்டில் ஒன்றை தேர்ந்தெடுக்கக்கூட வாய்ப்பின்றி அவர்கள் மீது முடிவை திணிப்பது என்ன வகை நீதி? வாழ்க்கையை வேரோடு பிடுங்கி நடுவது என்பது சிலருக்கு ஏதோ சட்டையை மாற்றிக் கொள்வது போன்று மிக சுலபமான விசயமாக தெரிகிறது போலும். இப்படி பேசும் அந்த அல்பைகள்தான் தனது நகத்தில் ஒரு சின்ன கீறல் விழுந்தால் கூட ஊரைக் கூட்டி ஒப்பாரி வைக்கிறார்கள்.
அரசாங்கத்தினுடைய மறுவாழ்வுக்கான நிவாரணம் கொடுப்பதிலும் பல தில்லு முல்லுகள். ஒரு எ-காவுக்கும், மாஹாராஸ்டிராவில் ரிலையன்ஸ் கையகப்படுத்தியுள்ள இடங்களில் எல்லாம் இருப்பிடங்கள் மக்களின் கையிலேயே இருக்கின்றன. அவற்றை கம்பேனிகள் வாங்கவில்லை. இதன் மூலம் அவர்களுக்கு முழுமையான நிவாரணம் கொடுக்க வேண்டிய கடமையிலிருந்து அரசு நழுவிக் கொள்கிறது. அதே நேரத்தில் SEZக்கள் எனும் அயல்நாட்டு காலனிகளின் நடுவே தீவுகளாய் மாட்டிக் கொள்ளும் இந்த மக்கள் தமது வாழ்வாதாரமான விவசாய நிலங்களையும் இழந்து அத்துக் கூலிகளாக அதே தரகு-பன்னாட்டு கம்பேனி வாசலில் நிற்பார்கள். சட்டப்படி எல்லாம் சரிதான். வாழ்வாதாரம் சட்டப்படி பறிக்கப்படவில்லைதான். ஆனால் யதார்தத்தில்? எல்லாம் சட்டப்படிதான். ஆனால் சட்டம் எல்லாம் அவனுக்கு எடுபிடிதான்.
இது கூட பரவாயில்லை. நிலவுடைமையாளர்களுக்கு நிலத்தின் பெயரில் ஏதோ ஒரு தொகையாவது கிடைக்கிறது. அந்த நிலங்களை நம்பி வேலை செய்யும் நிலமற்ற கூலிகளின் வாழ்க்கை? அவர்களுக்கு என்ன நிவாரணம்? ஓ.. அவர்கள்தான் மனிதர்களே கிடையாதல்லவா? மறந்துவிட்டேன். என்னை மன்னித்தருளுங்கள், (அ)நாகரீக பெருந்தகையீரெ!
விவசாயிகளுக்கு ஆப்பு செருகும் SEZக்கு ஆதரவாக பேசும் அதே வாய்கள்தான் சில்லறை வணிகத்திற்க்கு ஆதரவாக பேசும் போது விவசாயியின் நலனுக்காக ஓநாயைப் போல ஒப்பாரி வைத்து அழுததை இங்கு நினைவு படுத்திக் கொள்ளுங்கள். இவர்கள் உண்மையில் யாருடைய நலனுக்காக நாயைப் போல நாக்கைத் தொங்க விட்டு அலைகிறார்கள் என்பதனை புரிந்து கொள்ளுங்கள். இவர்கள் மக்கள் மீது பாசமிருப்பது போல நடிப்பதின் நோக்கத்தையும் இவர்கள் உண்மையில் எந்த தேசத்துக்கு விசுவசமாக உழைக்கிறார்கள் என்பதையும் புரிந்து கொள்ளுங்கள்.
மறுகாலனியத்தின் எல்லா அம்சங்களும் பொருந்திய ஒரு தாக்குதலே SEZ:
கொஞ்சம் கூட நியாயப்படுத்த வகையின்றி 10,000 ஏக்கர்களுக்கும் அதிகமான நிலங்களை பிடுங்குவது என்பது ரியல் எஸ்டேட் பிசினஸுக்கு அரசே ஃமபியா வேலை பார்க்கும் விசயம் என்பதை பார்த்தோம். விவசாய நிலங்களை கையகப்படுத்துவது என்பது இந்திய சுயச்சார்பின் மீதும், அந்த நிலங்களை நம்பி வாழும் லட்சக்கணக்கான் மக்களின் வாழ்க்கையையும் பாதிக்கும் ஒரு அட்டுழியம் என்பதை பார்த்தோம். ஆனால் இதையெல்லாம் மீறி சில விசயங்கள் SEZயில் உள்ளன.
SEZக்கு முழுமையான வருமான வரி விலக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. SEZயில் செய்யப்படும் கட்டுமான நடவடிக்கைகளுக்குக் கூட வருமான வரி கிடையாது. இதனால் அரசுக்கு ஏற்ப்படும் நஸ்டம் 1 லட்சத்தி சொச்சம் கோடிகள். ஏற்கனவே 15 வருடமோ அல்லது பத்து வருடமோ வருமான வரிச் விலக்குகளை அனுபவிக்கும் தகவல் தொழில் நுட்ப கம்பேனிகள் எல்லாம் நாக்கைத் தொங்க விட்டுக் கொண்டு தாம் ஏற்கனவே இருக்கும் பகுதிகளையும் SEZக்களாக அறிவிக்க சொல்லி விண்ணப்பிக்கின்றன. இன்னுமொரு பத்து வருடம் வரி விடுமுறை கிடைக்கிறதல்லவா? நம்மிடம் வருமானத்திலிருந்தும் வரியை பிடுங்கி விட்டு பிறகு வரி போக எஞ்சிய பணத்தில் நாம் வாங்கும் பொருட்களிலும் சேவை வரி உள்ளிட்ட பல்வேறு வரிகளை பிடுங்கும் அரசு, அவனது லாபத்திற்க்கு மட்டுமே பிடுங்கப்படும் வருமான வரிக்குக் கூட விலக்குக் கொடுப்பது எந்தளவுக்கு அயோக்கியத்தனம்.
என்னவிதமான தொழிற்சாலைகளையும், என்னவிதமான அயோக்கியத்தனங்களையும் SEZகளில் செய்யலாம். ஏனேனில் SEZக்களின் முழுமையான கட்டுப்பாடு என்பது அதற்கென உருவாக்கப்படும் அரசு உறுப்பு அல்லாதா ஒரு குழுவின் கையிலேயே இருக்கும். போலிசோ அல்லது வேறு யாருக்குமோ அங்கு அதிகாரம் கிடையாது. அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளையும் கூட அவர்களே பார்த்துக் கொள்வாரகள். நந்திகிராமத்தில் அரசாங்கம் செயல்பட முடியவில்லை என்று அங்கலாய்த்த புத்ததேவு SEZக்களில் அரசாங்கம் இருக்குமிடம் எது என்று கண்டுபிடித்துச் சொன்னால் புண்ணியமாகப் போகும். தொழிலாளர் சட்டங்களும் கூட SEZக்களில் செல்லுபடியாகாது. தொழிலாளர் சட்டங்கள் நடைமுறையில் உள்ள இடத்திலேயே அவன் அத்தனை விதமான அயோக்கியத்தனங்களிலும் ஈடுபடுகிறான் எனில் SEZக்களில் என்னென்னெ செய்வான் என்பதற்க்கு எந்த வரம்புக் கிடையாது. ஹோண்டா தொழிலாளர்களின் சுயமரியாதை உணர்வுக்கு இந்திய அரசும், ஹோண்டா நிர்வாகமும் இணைந்து கற்றுக் கொடுத்த பாடத்தை நினைவு படுத்திக் கொள்ளவும்.
SEZக்கள் என்று ஒரு சிறிய மாவட்டத்தின் அளவுக்கான இடத்தை ஒதுக்கிக் கொடுக்கும் பகுதிகள் எதுவும் இந்திய அரசமைப்பு வடிவஙகளுக்கு உட்ப்பட்டவையல்ல. அதாவது தேர்தல் கிடையாது, போலிசு கிடையாது, பஞ்சாயத்து, உள்ளூராட்சி என்று எந்தவொரு ஜனநாயக அரசு வடிவங்களும் கிடையாது. இதனால்தான் இதனை நாட்டுக்குள்ளேயே ஒரு தனி நாடு என்கிறோம். அங்கு நடப்பது அவனது ராஜ்ஜியம்தான். அதிகபட்சம் கண் துடைப்புக்காக ஒரு கண்காணிப்பு குழு ஒன்றை போடுவார்கள் அரசு சார்பிலிருந்து. இது போன்ற குழுக்களின் இது வரையான செயல்பாடுகளே நகைப்புகிடமாக உள்ளன. எ-காவுக்கு TRAI எனப்படும் தொலைத் தொடர்பு துறைக்கான கட்டபஞ்சாயத்து சபை உள்ளது. இதன் வேலையே ரிலையன்ஸ் செய்கிற அத்தனை அயோக்கியத்தனங்களையும் நியாயப்படுத்தி சட்டம் இயற்றுவதுதான். அதாவது விவேக் காமெடியில் வரும் மைனர் குஞ்சுவைப் போல அட்வான்ஸ் புக்கிங்கில் ரேப்பிங் வேலைகளை செய்வதை உறுதிப்படுத்தும் ஒரு கட்டபஞ்சாயத்து கூடமாக உள்ளது.
போபாலின் யூனியன் கார்பைடு கம்பேனி சட்டப்பூர்வ நடைமுறைகள் சாத்தியமான இடத்திலே உட்கார்ந்து கொண்டுதான் விச வாயு தொழிற்சாலையை நடத்தினர். இன்று வரை யூனியன் கார்பைடு கழிவுகள் கூட அகற்றப்படாமல் போபாலில் இருக்கிறது. இன்று வரை ஒன்றும் பிடுங்க வக்கின்றி இந்த அரசும் எடுபிடி வேலை பார்த்துக் கொண்டிருக்கிறது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் தொழிற்சாலை சுற்று வட்டாரத்தில் கிட்டத்தட்ட 10 கிலோ மீட்டர் அளவில் பெரும் சீர்கேட்டை உருவாக்கிக் கொண்டு இன்னும் இயங்கிக் கொண்டுதான் இருக்கிறது. இங்கேயே இப்படியெனில் எந்த ஒரு அரசு நிர்வாகத்தின் கீழும் வராத சுயாட்சி பிரதேசஙகளான SEZக்களில் என்னவிதமான நாசகர ஆய்வுகளை அவர்கள் செய்வார்கள்? அதனை அரசு எப்படி கட்டுப்படுத்தும்? அப்படி ஒரு நமபகமான அரசுதானா இது? அப்படியெதுவும் முன்னோடியாக இந்த அரசு இது வரை நடவடிக்கை எடுத்ததில்லையே?
ஒரு எ-காவுக்கு வங்காளத்தில் யாருக்காக ஃமாபியா வேலை செய்துள்ளது 'போலி கம்யுனிஸ பாசிச' CPM அரசு என்று பார்த்தால் காறி உமிழ்ந்து விடுவீர்கள். போபால் விசவாயு புகழ் Union Carbide கம்பேனி Dow Chemicals என்ற பெயரில் நந்திகிராம் எனும் நான்கு போகத்திற்க்கும் அதிகமாக விளையும் பசுமையான இடத்தை நாசமாக்கவும், இந்தோனேசியா கம்யுனிஸ்டுகளை சுகர்தோ கொன்று குவிப்பதற்க்கு உதவி செய்த ஃமாபியா கம்பேனியான Salim Groupற்க்காகவுமே நந்திகிராமத்தில் நாய் போல விசுவாசமாக நடந்து கொண்டுள்ளது இந்த அரசு.
இப்படி நாட்டின் இறையாண்மையின் மீது மூத்திரம் அடிக்கும் வகையில் நாட்டிற்க்குள்ளேயே ஒரு காலனியாக உருவாகும் SEZக்களை வேலைவாய்ப்பு மற்றும் மூலதனம் என்ற இரு காரணங்களால் வரவேற்கிறார்கள் அடிவருடிகள். வேலை வாய்ப்பு என்பதைப் பொறுத்த வரை இவர்கள் எந்தளவுக்கு பொய்யர்கள் என்பதைப் பார்ப்போம். இதற்க்கு முன்பு இத்தனை ஆயிரம், இத்தனை லட்சம் வேலை வாய்ப்புக் கொடுக்கும் என்று ஆரம்பித்த எல்லா உலகமயத் திட்டங்களும் உண்மையில் வேலைவாய்ப்பை ஒரு செக்ஷனிடமிருந்து பிடுங்கி இன்னொரு செக்ஷனுக்கு கொடுக்கும் வேலையைத்தான் செய்துள்ளன. நிரந்தர தொழிலாளர்களாக பல கம்பேனிகளில் வேலை பார்த்தவர்கள், அரசு நிறுவனங்களில் வேலை பார்த்தவர்கள் ஆகியோரை ஒப்பந்த கூலிகளாக மாற்றிய அதே நேரத்தில்தான், விவசாயத்தை அழித்து கோடிக்கணக்கில் நகரங்களுக்கு சாரி சாரியாக நவீன நாடோ டிகளாக உருவாக்கிய அதே நேரத்தில்தான், சிறு தொழில் துறையில் சிதைவை உருவாக்கி வேலை உத்திராவாதமின்மையை உருவாக்கிய அதே நேரத்தில்தான் சேவை துறையில் சில லட்சம் வேலையை உருவாக்கியது உலகமய நடவடிக்கைகள். இதனை முன்னிட்டுத்தான் 2004 செப்டம்பரில் RBIயினுடைய அறிக்கை பின்வருமாறு கூறியது - "உலகமயம் வேலை வாய்ப்பு விகிதத்தை குறைத்து விட்டது." என்று. 2004 செப் க்கும் 2006 செப் க்கும் இடையில் பெரிய அதிசயம் எதுவும் நிகழ்ந்து விடவில்லை - சில ஆயிரம் விவாசாயிகளின் சாவை தவிர்த்து. சேவை துறையிலும், சில தரகு முதலாளித்துவ உற்பத்தித் துறையிலும் வளப்பமாக உட்கார்ந்து கொண்ட சில லட்சம் பேருக்காக இந்த நாட்டின் பெரும்பான்மை மக்களின் வாழ்வை காவு கொடுப்பது என்பது படு முட்டாள்தனம். இவர்கள் கொடுக்கும் வேலைவாய்ப்பின் அழகு ரயில்வே காலாசி வேலைக்கு(இதுதான் இருப்பதிலேயே குறைந்த தகுதி தேவைப்படும் ரயில்வே வேலை) MBA படித்தவர்களும், BE, ME படித்தவர்களும் ஆயிரக்கணக்கில் விண்ணப்பமிட்ட போது வெளி வந்த மர்மம் குறித்து அடிவருடிகள் பதில் சொல்ல வேண்டும்.
SEZக்களால் வாழ்வாதாரம் பறிக்கப்படும் லட்சக்கணக்கானவர்கள், அதற்க்கு பல லட்சம் கோடியில் வழங்க்ப்படும் சலுகைகள், சுற்றுச் சூழலில் அவை ஏற்ப்படுத்தும் பாதிப்புகள், இந்திய வளங்களை குறைந்த விலைக்கு சுரண்டி வரிச் சலுகைகளின் உதவியுடன் குறைந்த விலைக்கு நமக்கே விற்று தேசிய முதலாளிகளை அழிவிற்க்கு தள்ளும் நிலை, உள்ளூர் தொழில்களை ஒழிக்கும் நிலை, நமது சுயச் சார்பை அழித்து, நமது வளங்கள் மீது அவனது ஆதிக்கத்தை நிறுவுவது இவற்றையெல்லாம் நோக்கும் போது அது வழங்கும் வேலை வாய்ப்பு என்பது உண்மையில் ஏமாற்றே. உண்மையைச் சொன்னால் யாருடைய வாழ்வாதாரத்தை அழித்து சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் கட்டப் படுகின்றனவோ அவர்களுக்கு SEZ எந்த ஒரு வேலைவாய்ப்பையும் வழங்கும் அடிப்படையின்றி இருக்கிறது. அதிகபட்சம் கட்டுமான இடங்களில் கூலி வேலை செய்ய மட்டுமே அந்த அப்பாவி விவசாயிகளை அவர்களால் பயன்படுத்த முடியும்.
SEZக்களில் யாரை வேண்டுமானாலும் அவன் வேலைக்கு வைத்துக் கொள்ளலாம். இதன் அர்த்தம் குறைந்த கூலிக்கு வேலை செய்யத் தாயார் எனில் அவன் ஆப்பிரிக்க நாட்டினரைக் கூட இங்கு கொண்டு வந்து வைத்து வேலை வாங்கலாம்.
சிறப்பு பொருளாதார மண்டலங்கள் என்பவை ஏற்றுமதிக்கான இடங்கள் என்று அரசு சொல்கிறது. ஆனால் அங்கு உற்பத்தியாகும் பொருட்கள் உள்நாட்டில் விற்க்கப்படாது என்பதற்க்கு எந்த விதமான சட்டப் பூர்வ தடையும் கிடையாது. எனவே அனைத்து வித சலுகைகளின் துணை கொண்டு குறைந்த விலையில் பொருட்களை தயார் செய்து உள்நாட்டு தொழிலை நிர்மூலமாக்குவதை தடுக்க எந்த சட்ட பாதுகாப்பும் கிடையாது.
இப்படி சட்டப்பூர்வமாக இந்தியாவில் ஒரு பெரிய இடத்தை வளைத்துக் கொண்டு அதில் இந்திய அரசமைப்பு வடிவங்கள் எதற்க்கும் உட்ப்படாமல், கிராம பஞ்சாயத்து, உள்ளூராட்சி என்று எந்தவொரு ஜனநாயக அரசு வடிவங்களுக்கும் உட்படாமல், தனியொரு ராஜ்யமாய், தனது இஷ்டம் போல இந்திய வளங்களை சுரண்டிக் கொண்டு, எல்லா சலுகைகளையும் அனுபவித்துக் கொண்டு. அதன் விளை பொருளை நமக்கே விற்றுக் கொண்டு - இவையெல்லாம் பழைய பிரிட்டிஸ் கிழக்கிந்திய கம்பேனி அரசை நியாபகப்படுத்தவில்லை. கல்லாப் பெட்டியில் உட்கார்ந்திருந்தால்தான் ஒருவனை கடை முதலாளி என்று நம்புவேன் என்று சொல்லும் முட்டாள்களா நாம்.
உலகமய மறுகாலனியாதிக்கம் எப்படி பிறந்தது?
1980களின் இறுதியில் அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்திய பொருளாதாரம் முற்றிலும் மீள முடியாத நெருக்கடியில் இருந்தது. இதே காலத்தில்தான் மேலை நாட்டு பெரும் தொழில் கூடங்களினால் சுற்றுச் சூழலில் ஏற்ப்பட்ட மாசுகள் மேற்கொண்டு முதலாளித்துவ உற்பத்தியை அந்த நாடுகளில் வளர்க்க முடியாது என்ற நிலையை ஏற்படுத்தின.
முதலாளித்துவம் உயிர்வாழ்வதற்க்கு மிக மிக அடிப்படையான விசயம் தங்கு தடையற்ற உற்பத்தியாகும். உற்பத்தி தடை படக் கூடாது என்பதற்க்காக உற்பத்தியான பொருட்களைக் கூட அழிக்க தயங்காது முதலாளித்துவம். இன்னிலையில் மீண்டும் தமது இழந்த சொர்க்கத்தை பெருவதற்க்கு இரண்டு விசயங்கள் ஏகாதிபத்தியத்திற்க்கு தேவையாய் இருந்தது. ஒன்று புதிய சந்தைகள், இரண்டு புதிய உற்பத்தி மையங்கள்.
உலகமயம் என்பது அவர்களின் இந்த இரண்டு தேவையையும் நிவர்த்தி செய்யும் விசயமாக இருக்கிறது. தமது பொருளை விற்பனை செய்ய பெரியதொரு உலக சந்தை, குறைந்த விலையில் பொருட்களை உற்பத்தி செய்ய மலிவு விலை கூலி உழைப்பு, மூல வளங்கள், இதெல்லாம் போக அரசினுடைய அத்தனை விதமான சலுகைகளும் அவனுக்கு கிடைக்கின்றன. இத்துடன் சுற்றுச் சூழல் மாசுபாடு தமது நாட்டின் மீது பாதிப்பு ஏற்படுத்துவதிலிருந்தும் விடுதலை.
வெறுமனே மூன்றாம் உலக நாடுகளில் முதலீடு மட்டும் செய்தால் உற்பத்தி பொருளின் மீதான, சந்தை மீதான, வளங்கள் மீதான தனது முழு ஆதிக்கத்தின் மூலம் கோடி கோடியாய் கொள்ளையடிக்க உலகமயம் வகை செய்கிறது. இதை மறைக்கத்தான் வேலை வாய்ப்பு என்று பூ சுற்றுகிறார்கள் அடிவருடி நாய்கள். இதோ சீனாவின் சந்தை சோசலிச சாதனைகளை சிறிது ஒற்று நோக்கினால் அதன் அருகதை என்னவென்று தெரியும்.
நமக்கு பத்து பதினைந்து வருடம் முன்பே வீட்டை திறந்து விட்டவன் சீனாக்காரன். 1980களின் இறுதியில் மாவோவினுடைய பொருளாதார திட்டங்கள் தமது வரம்பெல்லையை அடைந்தன. அத்ற்க்கு மேல் அவற்றை வேறு வடிவங்களுக்கு மாற்ற வேண்டிய தேவை ஏற்ப்பட்டது. ஆனால் அது வரை அந்த பொருளாதாரம் பல சாதனைகளை சாதித்திருந்தது. சீனாவின் வாழ்க்கைத் தரம் இந்தியாவைவிட பல மடங்கு உயர்ந்திருந்தது. ஆண்டுக்கு 11.5% சதவீதமாக சோசலிச சீனாவின் தொழில்த் துறை வளர்ச்சி இருந்தது. விவசாயத்தின் வளர்ச்சி என்பது 150% க்கும் மேல் இருந்தது. தனிமனிதனுடைய சாராசரி நுகர்வு பல மடங்கு உயர்ந்திருந்தது. பணி நிரந்தர பாதுகாப்பு இருந்தது, மருத்துவம் அரசாஙக்த்தினுடைய பொறுப்பாக இருந்தது(பொது இன்ஸுரன்ஸ்), சுத்தமான தண்ணீர் இருந்தது, கல்வி அனைவருக்கும் கிடைத்தது. ஆமாம், கோக்கும், பெப்சியும், பிசாவும், பேஜ் 3 இன்பங்களும் மட்டும் சீனாவில் கிடைக்காமல் இருந்த சோகம் ஒன்று இருந்ததை நான் கட்டாயம் சொல்லியே தீர வேண்டும். இன்னிலையில் சீன பொருளாதாரத்தின் சாதனைகளின் பலத்தில் நின்று கொண்டு அதனை அடுத்தக்கட்ட சோசலிச வளர்ச்சிக்கு கொண்டு செல்லாமல் சீனாவை சீரழிவுப் பாதைக்கு திருப்பினர் டெங் தலைமையிலானவர்கள். சீனாவின் கதவுகள் அன்னிய மூலதனத்தின் வேட்டைக்காக திறந்துவிடப்பட்டன.
இதோ இன்று சீனாவினுடைய அதிகாரப் பூர்வ அறிக்கையே அங்கு ஏழை பணக்காரன் பிளவு அதிகாமிவிட்டதாக ஒத்துக் கொள்கிறது. வேலை உத்திரவாதம் கிடையாது, கிடைக்கும் வேலைகள் பெரும்பாலும் ஒப்பந்த கூலி வேலைகள், போதிய வேலை வாய்ப்பில்லை, working povertyயின் அளவு அதிகரித்துள்ளது, விவசாயம் வாடுகிறது, ஐரோப்பாவிற்க்கு கள்ளத் தோணி ஏறுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது, மருத்துவம் - காசு, கல்வி - காசு, முக்கிய ஆறுகள் அனைத்தும் சாக்கடையாகி விட்டன, உலகின் சுற்றுசூழல் மாசுபாடில் முன்னணியில் உள்ள பத்து நகரங்களில் 8 சீனாவில் உள்ளது, கலாச்சார சீர்கேடுகள் ஒரு பக்கம் தாக்குதல் நடத்துகிறது, சுத்தமான குடிநீர் கிடைக்காமல் தவிப்பவர்கள் எண்ணிக்கை போன வருடத்தை விட இந்த வருடம் அதிகரித்து விட்டது(வெறும் எண்ணிக்கை அல்ல சதவீத கணக்கே அதிகரித்து விட்டது), இந்த அம்சத்தில் இந்தியாவைவிட மோசமானதொரு நிலையை அடைந்து விட்டது சீனா.
இந்தியாவின் பிரதமர் கூட சொல்கிறார்: "உலகமயம் இந்தியாவில் பிளவை அதிகப்படுத்தியுள்ளது. இந்திய அரசின் மீது மக்கள் நம்பிக்கை இழந்து வருகிறார்கள்" என்று. ஃகோபி அன்னானும் கூட இதனையே சொன்னார். ஆம் GDPதான் வளர்ச்சி என்றால் இந்தியாவும், சீனாவும் வல்லரசுகள்தான். துரதிருஷ்டவசமாக எல்லைக் கோடுகள் நாட்டைச் சுற்றி ஓடவில்லை. உலகமய சூழலில் அவை நாட்டின் குறுக்கும் நெடுக்குமாக ஓடுகிறது. சீனாவிற்க்குள் ரெண்டு சீனா, இந்தியாவுக்குள் ரெண்டு இந்தியா. உண்மையில் இந்த GDPக்கள் எந்த சீனாவின், எந்த இந்தியாவின் வளர்ச்சியை குறிக்கின்றன? எந்த இந்தியா ஒளிர்கிறது? எந்த சீனா ஒளிர்கிறது?
ஏன் இந்த குழப்பம்? இனிமேல் இந்த எல்லைக் குழப்பம் வந்து விடக் கூடாது என்பதற்க்காகவே நாட்டுக்குள்ளேயே நாடாக SEZக்களை உருவாக்குகிறார்கள். உண்மைதான் சீன GDP வளர்ச்சியில் SEZக்களின் பங்களிப்பை நாம் மறுக்கவே இல்லை. அதே சீனாவின் சீரழிவிலும் SEZக்களின் பங்கை நாம் மறப்பதேயில்லை.
இப்படிப்பட்ட சீனாவிலேயே 6 SEZக்கள்தான் உள்ளன. இந்தியாவில் இது வரை ஒப்புதல் கொடுக்கப்பட்ட SEZக்களே 300யை தொடும். எனில் அன்னிய மூலதனம் இந்திய வளங்களை என்ன பாடு படுத்தப் போகிற்து என்பதை கற்பனை செய்து கொள்ளுங்கள்.
ஏகாதிபத்தியங்கள் தமது மூலதன சிக்கலை சரி செய்ய இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளின் சந்தையையும், வளங்களையும் சுரண்டுகின்றனர். இதனை முன்னிட்டு இந்திய தொழில்களுக்கும், விவசாயத்திற்க்கும் மான்யம் கொடுக்காதே என்று நமது அரசை மிரட்டுகின்றனர். இப்படி நமது சொந்த நாட்டின் தொழில்கள் அழிக்கப்படுகின்றன, அல்லது அவனுக்கு ஒப்பந்த தொழில் செய்யும் பட்டறையாக மாறுகின்றன. உள் நாட்டு விவசாயிக்கு மான்யம் கொடுக்காதே என்று சொல்லும் அவன் அவனது சொந்த நாட்டில் விவசாயத்துக்கு 100% 120% மான்யம் கொடுத்து உலக சந்தையை தனது கட்டுப்பாட்டில் வைப்பதுடன், இந்திய சந்தையிலும் தனது பொருளை குவிக்கிறான்(பருத்தி, கோதுமை, Tea etc).
சிறு தொழில் உள்ளிட்டவற்றுக்கு மான்யம் கொடுப்பதை எதிர்க்கும் அவன் இந்தியாவில் தொழில் தொடங்க வரிவிலக்கு உள்ளிட்ட எல்லா சலுகைகளையும் மறைமுகமாக பெற்றுக் கொள்கிறான். இந்தளவுக்கு இழிச்சவாயானாடா நீ என்று தனிமையில் உட்கார்ந்து அவன் நம்மை இகழ்ந்து பேசுவதை வீடியோ பிடித்து போட்டால் கூட சில அடிமை ஜென்மங்கள் திருந்தாது என்பதிருக்க, சுயமரியாதையுள்ளவர்கள் நாடு அடிமையாகும் இந்த அம்சத்தை புரிந்து கொள்வதும், இந்த அடிப்படையில் SEZக்களை ஒப்பிட்டு புரிந்து கொள்வதும் மிகவும் அவசியமானதாகிறது.
SEZக்கள் அவனது சந்தை வெறிக்கும், வளங்களை சுரண்டும் கவந்த பசிக்கும் முழுமையாக இரை போடும் ஒரு அருமையான மறுகாலனியாதிக்க திட்டம். உலகமயத்தின் பல் பரிணாம நோக்கங்களை ஒருங்கே நிறைவேற்றும் ஒரு வடிவமே SEZக்கள்.
இதோ, இருந்த கொஞ்சம் நஞ்சம் முகமூடியும் கழண்டு, பிரிட்டிஸ் கிழக்கிந்திய கம்பேனியின் அதே வடிவத்தில் மறுகாலனியம் SEZ என்ற பெயரில் ஆர்ப்பரித்து வருகிறது. ஆள், அம்பு, சேனையுடன் நமது எதிர்காலத்தை, நமது குழந்தைகளின் எதிர்காலத்தை தமது லாப வெறிக்கு இரையாக்க நாக்கைத் தொங்க போட்டுக் கொண்டு வருகிறது. வீரமுள்ள, சுயமரியாதையுள்ளவர்கள் வீட்டுக்கொருவர் அல்லது இருவராய் வீதியில் இறங்கி மறுகாலனியாதிக்க வெறியர்களையும், அவர்களின் அடிவருடிகளையும் அடித்து நொறுக்க அணி திரள வேண்டிய காலம் நெருங்கி விட்டது.
அசுரன்
<< Home